இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த சீனா
இந்திய (india) ஆளுகைக்குட்பட்ட லடாக் பகுதிகளை இணைத்து தனது மாவட்டமாக சீனா (china) அறிவித்துள்ள நிலையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது
கிழக்கு லடாக்கின் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதியில் இருந்து இருதரப்பு ராணுவமும் தங்களது இடத்திற்கு திரும்பியது.
இந்த சம்பவம் நடைபெற்று ஓரிரு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் லாடாக் பகுதிகளை இணைத்து ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் பெயரை சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என இந்தியா தெரிவித்துள்ளது.
"இந்தியப் பிரதேசத்தில் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சீனாவின் ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நாம் பார்த்தோம்.
இந்த மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகளின் அதிகார வரம்பு இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் வருகிறது" என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
உலகப் பெரிய அணை
ஏற்கனவே பிரம்மபுத்திரா ஆற்றில் உலகப் பெரிய அணை கட்ட இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பான இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்திய நலனை காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |