இலங்கையின் அரசியல் நெருக்கடியை தீர்க்க இந்தியா தலையீடு?
இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், இலங்கை அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் போது, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் என உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதன் போது கூறியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
நெருக்கடியான நிலையில் இலங்கையுடன் கைகோர்த்துள்ள இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
High Commissioner received a group of parliamentarians and reiterated #India’s continued commitment to support ??. The Parliamentarians thanked the people of ?? for standing with people of ??. They shared with HC their perspective on current economic&political situation in ??. pic.twitter.com/ifuT5qKFRB
— India in Sri Lanka (@IndiainSL) April 28, 2022
