யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது குடியரசு தின கொண்டாட்டம்
Jaffna
India's Republic Day
India
By Theepan
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்றைய தினம் (26) இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
குடியரசு தின வாழ்த்து செய்தி
தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்றது. எனினும் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதானாலேயே இந்த நாளில் குடியரசு தினம் கொண்டாடப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |




9ம் ஆண்டு நினைவஞ்சலி