தமிழர்களுக்கு நேர்ந்த இனப்படுகொலை : வாய்திறக்க அஞ்சும் இந்தியா
சர்வதேச செய்திகளே மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினம் என அடையாளப்படுத்தியிருந்த நிலையில், தொப்புள் கொடி உறவுகளான இந்திய (India) தரப்பு செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என தெரிவித்து செய்தி வெளியிட்டிருப்பது கவலையளிக்கிறது என பத்தி எழுத்தாளர் ஐ. வி மகாசேனன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “எமது உணர்வை பிரதிபலிக்க வேண்டிய இடம்தான் தமிழகம்.
இலங்கை (Sri Lanka) தமிழர்களினால் தெரிவிக்க முடியாத விடங்களையும் வெளிப்படையாக தெரிவிக்கும் சுதந்திர இடைவெளி தமிழகத்தில் உள்ளது.
இருந்தும் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமல் ஊடகங்கள் இருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்கு, மே 18, தமிழகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்கள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஐபிசி தமிழுக்கு அவர் தெரிவித்த பல கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
