தமிழ் இன அழிப்பிற்கு துணை போகும் அநுர : சபையில் கிழிக்கப்பட்ட அரசின் முகத்திரை
இன அழிப்பிற்கான நீதி கொடுக்காமல் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றுவதுதான் தற்போதைய அரசின் நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (21) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மே 18 ஆம் திகதி கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என மக்கள் கோரும் போது 19ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி யுத்த வெற்றியை கொண்டாடியுள்ளார்.
இதிலிருந்து தெளிவாக புலப்படுகின்றது, கடந்த கால அரசாங்கங்களுக்கு தற்போதைய அரசு துணை செல்வதும், யுத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளையும் தள்ளி வைப்பதும்.
நாங்கள் இழந்த தமிழ் மக்களுக்காக நீதி கோரினால் அரசாங்கமானது இராணுவத்தை காப்பற்றவும் மற்றும் கடந்த கால அரசாங்கத்தை காப்பாற்றவும் போராடுகின்றது” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
