இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் தேவைப்பாடு! எடுத்துருக்கும் அரசியல் ஆய்வாளர்
ஒரு சிறிய தீவு நாடான இலங்கை, உலக மற்றும் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒருங்கிணைக்கப்படாமல் தனித்து இயங்க முடியாது என்று இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரொகட சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கை தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உலக வங்கி இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மறுவகைப்படுத்தியதன் பின்னணியில் உள்ள உண்மையான பொருளாதார நிலவரம் மற்றும் நாடு எதிர்கொள்ளும் கடுமையான சட்ட மற்றும் நிதிச் சவால்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான கடன்களை வங்கிகள் சர்வதேச சந்தையிலிருந்து பெற வேண்டியிருக்கும், மேலும் அக்கடன்களுக்கு அதிக வணிக வட்டி விகிதங்களையும் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தை
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்புத் தேவைகள் 130%-க்கும் மேலாக வேகமாக அதிகரிக்கும்.

பாதுகாப்புக் காரணங்களால் புது தில்லி முன்பு இலங்கை சுத்திகரிப்பு நிலையங்களில் ஆர்வம் காட்டாமல், எண்ணெய் குழாய்வழித் திட்டம் குறித்து மட்டுமே பேசி வந்தபோதிலும், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இலங்கையில் பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கவும், அந்நாட்டிற்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
உலக வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் முன் தன்னை ஒரு 'ஏழை நாடு' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, உலகின் ஒரு முக்கியப் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் வரை சீனா எவ்வாறு சலுகைகளைப் பெற்றது என்பதை நாம் ஆராய வேண்டும் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை இலங்கையும் உணர்ந்து, கட்டமைப்புச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |