இந்தியா எடுத்த திடீர் முடிவு! இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடையால் இலங்கைக்கான மா இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சிற்கு தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு சிக்கல்
இந்தியாவில் இருந்தே கோதுமாவை இலங்கை இறக்குமதி செய்து வந்துள்ளது. எனினும் விரைவில் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு முழுமையாக குறைவடையும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இலங்கைக்கு கடுமையான சிக்கல் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, தற்போது துருக்கியில் இருந்து மாத்திரமே கோதுமை மாவை இறக்குமதி செய்ய நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு
இதனால் கோதுமை மாவிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
You may like this

