இந்தியாவின் முக்கிய நிறுவனத்தின் கைகளுக்குள் செல்லும் சிறிலங்கன் எயார்லைன்ஸ்!
சிறிலங்கன் விமான சேவையை இந்தியாவின் டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் அரச தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிறுவன மறுசீரமைப்பு
இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனமான டாடா நிறுவனமானது எயார் இந்தியா உட்பட பல விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை நிர்வகித்து வருகின்றது.
இந்தநிலையில், அந்த நிறுவனம் சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் மீதும் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இலங்கையில் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் உள்ளதுடன், அந்த நிறுவனத்தை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்