ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் பிரித்தானியாவில்! கொழும்பு பறக்கும் இந்திய படைத்தளபதி!
தலைமைப் பண்பு என்பது சிக்கலானது. அதிலும் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பில் இப்போதெல்லாம் இன்று 71 வது அகவை கடக்கும் தலைவர் அறிவுரையாக வழங்கிய பேச்சுக்கு முன்னர் செயல் இருக்கவேண்டும் என்ற விடயத்தை கணக்கில் எடுப்பார் யாரும் இல்லை. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உள்ள பேச்சுரிமை வரப்பிரசாதத்தின் துணைகொண்டு அதிக கூச்சல்கள் அதீத அதிகாரவெளிப்பாடுகள் எல்லாம் அவரது பெயரை உச்சரித்தபடியே தொடர்கின்றன.
நாடாளுமன்ற அரங்கில் மட்டுமல்ல பொதுவாகவே ஈழத்தமிழர்களின் அரசியல்பரப்பில் அதிக கூச்சல்களும் காட்டுக்கத்தல்கள் வீராவேச உசுப்பேற்றல்களும் இவற்றுக்கும் அப்பால் உன்னை சும்மாவிடமாடேன் பாணி மிரட்டல்கள்; எல்லாம் காணக்கிடைக்கின்றன.
இவர்களும் தங்களை தாங்களே தலைமைப் பண்புக்கு அடையாளமாக சித்தரிக்கும் நிலையில் தமிழர்தாயகத்தின் வரலாற்றில் தனக்கு என தனித்துவத்ததை கொண்ட ஒரு ஆளுமை முகத்தின் இன்றைய அகவை நாளின் பின்னணியில் இந்தியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அடுத்தவாரத்தில் சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணப்படும் செய்தி முதல் இலங்கையில் 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் விசாரணை செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியது வரையான பரபரப்பு விடயங்கள் வருகின்றன.
இந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்காவும் சிறிலங்காவும் பெரிதும் சந்தடி இல்லாமல் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ள நிலையில், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை இன்னும் முன்னகர்த்துவதற்கான இலக்குடன் இந்திய இராணுவ தளபதி கொழும்புக்கு செல்லும் பின்னணியில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 7 நிமிடங்கள் முன்