அத்துமீறும் சீன துருப்புக்கள்..! இந்திய இராணுவம் கொடுத்த பதிலடி
எல்லை
இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவின் இந்நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.
ஜூன் 2020 இல், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பீடபூமியை ஒட்டி இந்திய மற்றும் சீன துருப்புக்கள் போரில் ஈடுபட்டன.
இந்த சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் சீனா வெளியிடப்படாத எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சந்தித்தது.
இந்திய இராணுவம் தகுந்த பதிலடி
அதன் பின்னர் அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் கடந்த 9ஆம் திகதி 300-க்கு மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீற முயன்றுள்ளனர்.
அவர்களுக்கு இந்திய இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மோதலுக்கு பிறகு இரு தரப்பு இராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தைகள்
மேலும், இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா இராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் சீனாவின் நவீன குடியேற்ற திட்டம் பாரிய பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)