கொழும்பு துறைமுகத்திற்கு நகர்வெடுத்துள்ள இந்திய காவல்படை கப்பல்கள்!
Government Of India
Sri Lanka Navy
Indian Navy
By Dilakshan
இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் (ICGS) வராஹா மற்றும் அதுல்யா ஆகியவை கொழும்பு துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன.
இதன்போது, குறித்த கப்பல்கள், கடற்படை மரபுகளின்படி வரவேற்கப்பட்டுள்ளன.
கப்பல் விபரம்
96.2 மீற்றர் நீளம் கொண்ட கடல்சார் ரோந்து கப்பலான (OPV) இந்திய கடலோர காவல்படை கப்பல் (ICGS) வராஹா, கமாண்டர் அஸ்வினி குமார் தலைமையில் செயல்படுகிறது.

அதே நேரத்தில் 50 மீற்றர் நீளம் கொண்ட விரைவு ரோந்து கப்பலான ICGS அதுல்யா, கமாண்டர் அனித் குமார் மிஸ்ரா தலைமையில் செயல்படுகிறது.
தொழில்முறை தொடர்பு
மேலதிகமாக வருகை தரும் கப்பல்கள் இலங்கை கடலோர காவல்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்க உள்ளன.

இந்த விஜயம் இந்திய மற்றும் இலங்கை கடலோர காவல்படையினருக்கு இடையேயான தொழில்முறை தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்