38 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சம்பவம்..! இந்திய பாதுகாப்பு அமைச்சர் - அநுர சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களுடன், மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டிருந்தேன். பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களது வாழ்த்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், அவரது அரசாங்கம் இரண்டு வருடங்களை நிறைவு செய்தமையையிட்டு அவருக்கு… https://t.co/ffdck1kFcO
— Rajnath Singh (@rajnathsingh) September 9, 2026
இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும்.
மேலும் அவர் நாளை (10) காலை நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சீர்த்திருத்தமே தொடர்கிறது! ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் இலங்கை சுட்டிக்காட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24