முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார் அமைச்சர் டக்ளஸ் - இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு!
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இலங்கையின் மிக முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகின்றார்.
அந்தவகையில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சில முக்கிய கோரிக்கைகள் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோரிக்கைகள்
இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் தீர்ப்பதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
