சீனாவின் கைவிரிப்பால் இலங்கை எடுத்துள்ள முடிவு?
Government
Sri Lanka
Issue
Indian
Fishermen
Kumar Gunaratnam
By Vanan
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர் பிரச்சினையை கண்டும் காணமாலும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் ( Kumar Gunaratnam) இதனைக் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சீனாவின் ஆதரவு போதுமானளவு கிடைக்காத நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற போதிலும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாத நெருக்கடிக்குள் இலங்கை அரசாங்கம் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
