இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை கைது
Sri Lanka Police
By Sumithiran
இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா அனுமதியின்றி தங்கியிருந்த 25 வயதுடைய இந்திய பிரஜையே ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் ஹட்டன் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்