பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இந்திய பிரஜை
10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bia) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் - பாங்கொக்கில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் இன்று (05) காலை 7 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஸ்கானிங் இயந்திரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளின் பெறுமதி
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வருகை முனையத்தின் "கிரீன் சேனல்" இல் புதிதாக நிறுவப்பட்ட ஸ்கானிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட முதல் கைது இது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 105 மில்லியன் ரூபா மதிப்பு என குறிப்பிடப்படுகின்றது.
குஷ் போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
