கொழும்பில் இந்திய பிரஜை குத்திக்கொலை
Sri Lanka Police Investigation
Crime
Death
By Sumithiran
கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்று(05) இரவு ஏற்பட்ட மோதலில் சக இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அஜய் குமார் என்ற 29 வயதுடைய இளைஞர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஹோட்டல் முகாமையாளர் கைது

சந்தேகத்தின் பேரில் 29 வயதான ஹோட்டல் முகாமையாளர் கைது செய்யப்பட்டதுடன் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு உணவகத்தில் சந்தேக நபருக்கும் அஜய் குமாருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி