இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி..!(காணொளி)
இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நகர்ந்து செல்லும் காட்சி
Some dangerous videos have surfaced after #CycloneFreddy hit the country of
— Anil Kumar Verma (@AnilKumarVerma_) February 21, 2023
Mauritius ???#CycloneFreddy #Freddy #Mauritius #nature #rain pic.twitter.com/ogamOIV44W
குறித்த புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளும் புயல் தொடர்பான உச்சகட்ட தயார் நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
This incredible video was captured by the International @Space_Station at 11:31 UTC on 17 February 2023. It shows the eye of a tropical cyclone called #Freddy, which is located over the Indian Ocean to the east of Madagascar. It is predicted to hit Madagascar on 21 February. pic.twitter.com/2hjx8Z7ybt
— World Meteorological Organization (@WMO) February 20, 2023
குறித்த புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் காணொளியாக வெளியிட்டுள்ளது.
