கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக் கொலை: விசாரணைகள் தீவிரம்
India
Canada
World
By Dilakshan
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 24 வயதுடைய இந்திய மாணவர் சிராக் அன்டில் என்பவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் கனடாவின் வான்கூவரில் (Vancouver)கார் ஒன்றின் உள்ளே இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிராக் அன்டில்(Chirag Antil) என்ற அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த மாணவர் ஹரியானாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
மாணவனின் சடலம் ஏப்ரல் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெற்கு வான்கூவரில் உள்ள கிழக்கு 55வது அவென்யூ, மெயின் தெருவில் ஒரு காரில் கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் கொலையை செய்த நபர் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் காவல்துறையினர் வெளியிடாத நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்