இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா..!
இந்தியா கேட்டுக்கொண்டால் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் எரிக் கார்செட்டி. "நான் முதலில் மணிப்பூர் பற்றி பேச விரும்புகிறேன்.
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். நீங்கள் இதில் அமெரிக்காவுக்கு என்ன அக்கறை என்று வினவினாள், அதில் எந்த உத்தி சார்ந்த அக்கறையும் இல்லை. மனிதம் சார்ந்த அக்கறை என்று கூறுவேன்.
உதவத் தயார்

மணிப்பூர் கலவரத்தில் குழந்தைகளும், தனிநபர்களும் உயிரிழப்பதைப் பார்த்து அக்கறை கொள்ள இந்தியராகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அங்கே அமைதிதான் தேவை.
அதுவே அனைத்து நன்மைகளுக்குமான முன்னோடி. வடகிழக்கு மாநிலங்களில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அமைதி இல்லாவிட்டால் அது எதுவும் இயல்பாக இருக்க இயலாது.
நாங்கள் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உதவத் தயாராக இருக்கிறோம். எங்களிடம் உதவி கேட்கும்பட்சத்தில் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இது முழுக்கமுழுக்க உள்நாட்டு விவகாரம் என்பதையும் அறிந்திருக்கிறோம்.
அங்கே விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். அங்கே அமைதி திரும்பினால் இன்னும் அதிகமான திட்டங்களை அங்கே செயல்படுத்தலாம். அதிகமான முதலீடுகளைச் செய்யலாம்.
நான் ஒரே ஒரு விஷயத்தைத் தெளிவாக நிறுவ விரும்புகிறேன். இந்தியாவின் கிழக்கும், வடகிழக்கும் அமெரிக்காவின் அக்கறைக்கு உரிய பகுதிகள். அதன் மக்களும், இடங்களும், வளங்களும், எதிர்காலமும் நாங்கள் அக்கறையோடு அணுகும் விஷயங்கள்" என்றார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்