சிக்கப்போகும் அரசியல் பிரபலம்: தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியின் பின்னணியில் அதிர்ச்சி!
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதுடன், அது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் தற்போது தடுப்பு காவலில் உள்ளார்.
கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் வசிக்கும் ஒரு பெண் உட்பட இரண்டு பெண்கள், வீட்டு வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் ஒரு பையில் துப்பாக்கியுடன் நுழைந்தபோது கைது செய்யப்பட்டனர்.
சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதி
பெண்ணின் பையில் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி வண்ணம் பூசப்பட்டT56 துப்பாக்கி மற்றும் ஒரு மெகஸினையும் காவல்துறையினர் கண்டுப்பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் 72 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரதான சந்தேக நபர், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தனது சமையல்காரர் மூலம் துப்பாக்கியை தனக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார்.
விசாரணைகள்
அதன்படி, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், சம்பவத்தில் தொடர்புடைய சமையல்காரரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கியை தனக்கு வழங்கிய அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்படும் என்று விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
