லிட்ரோ நிறுவன புதிய தலைவர் வெளியிட்ட தகவல்
Colombo
Litro Gas
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கைக்கு எரிவாயுவை கொண்டுவந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுகாதாரதுறை உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமையளித்து எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயு விநியோகத்தை ஆரம்பிப்பதற்கான திகதியை நாளையதினம் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக கடந்த 7 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் எரிவாயு கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது.
நேற்றிரவு அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

