அமெரிக்க அரச தலைவர் தொடர்பில் அம்பலமாகியுள்ள தகவல்!
தற்போதைய அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனின் (Joe Biden) செல்வாக்கு இதற்கு முன் வேறு எந்த அமெரிக்க அரச தலைவரும் சந்திக்காத அளவுக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த கணிப்பானது முதல் 3 மாதங்களில் ஜோ பைடனின் (Joe Biden) செல்வாக்கு 56 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 11.3 சதவீதம் குறைந்து 44.7 சதவீதமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46ஆவது அரச தலைவரான ஜோ பைடன் (Joe Biden) கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் அமெரிக்கா கொரோனாவின் தாக்கம் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்திருந்தது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற ஏராளமான சவால்களை அவர் சந்தித்திருந்தார்.
குறிப்பாக அரச தலைவரின் நிர்வாகத்தால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை தீவிரமாக செயல்படுத்தியதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதனால் பதவிக்கு வந்த 3 மாத காலத்தில் அமெரிக்க மக்களிடம் ஜே பைடனின் (Joe Biden) செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது.
ஆனால் தற்போது ஜோ பைடனின் (Joe Biden) செல்வாக்கு, இதற்கு முன் வேறு எந்த அமெரிக்க அரச தலைவரும் சந்திக்காத அளவுக்கு கடுமையாக சரிவடைந்துள்ளது.
ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது மற்றும் குழப்பமான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்றது போன்ற காரணங்களால் ஜோ பைடனின் (Joe Biden) செல்வாக்கு சரிந்ததாக கருதப்படுவதாக குறித்த பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.