சிறைக்கைதிகள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!
Corona
SriLanka
Preison
By Chanakyan
கொரேனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் விபரங்களை அறிந்து கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலையில் கொவிட் தகவல் கேந்திர நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, கைதிகளின் குடும்பத்தினர் 011- 4677101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் prison.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தொடர்பு கொள்ள வேண்டிய சிறைச்சாலையின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
