அனுரவிற்கு கோட்டை நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு!
Colombo
Anura Kumara Dissanayaka
Sri Lanka Politician
Supreme Court of Sri Lanka
Sri Lankan political crisis
By Pakirathan
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட 25 பேருக்கு 8 மணி நேர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவினை கோட்டை நீதவான் இன்றையதினம் பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய, இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல முடியாது என நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை
இன்று தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், நாட்டின் நிலைமைக்கு இடையூறு ஏற்படும் வகையிலான எதிர்ப்பு நடவடிக்கையாக மாறலாம் என காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி