ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு
Colombo
Galle Face Protest
Sri Lankan Peoples
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் ஊடகம் சார்ந்தவர்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 55 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஒருவர் ஆபத்தான நிலையில்
அத்துடன் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
