கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
கனடாவில்(Canada) வரி கோப்புக்களை பதிவு செய்யாதோருக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கனேடிய வருமான முகவர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏழு மில்லியன் கனேடியர்கள் இதுவரை வரி கோப்புக்களை பதிவு செய்யத் தவறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மொழிப் பிரச்சினை
இந்நிலையில்,நாட்டில் சுமார் பத்து வீதமான கனேடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்வதே இல்லை என.சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொழிப் பிரச்சினை அல்லது அறியாமை காரணமாக இவ்வாறு வரி செலுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைகள் வழங்கப்பட மாட்டாது
இவ்வாறு வரிக்கோப்புக்களை தாக்கல் செய்யத் தவறும் கனேடியர்களுக்கு அரசாங்கத்தின் எவ்வித சலுகைகளும் கிடைக்கப் பெறுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தாக்கல் செய்யப்பட்ட வரிக் கோப்புக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என கனேடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |