பயங்கரவாத அமைப்புகளின் உதவியில் இடபெற்ற காலிமுகத்திடல் போராட்டம் - சட்டமா அதிபர் பகிரங்கம்
காலிமுகத்திடல் போராட்டத்தை வழிநடத்திய செயற்பாட்டாளர்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
போராட்டகாரர்களுக்கு பேருந்துகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்காக சர்வதேச அமைப்பொன்று பணம் வழங்கும் என கூறப்பட்டதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன காவல்துறைக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றில் கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம் நடைபெற்ற காலத்தில் கிடைத்த பெருந்தொகை பணம் போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் புழங்கியதாக சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகே
கெமுனு விஜேரத்ன மற்றும் மோட்டிவேசன் அப்பச்சி ஆகிய நபர்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையிலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போபகே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நபர்கள் போராட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
