செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது....

Missing Persons Jaffna chemmani mass graves jaffna
By Independent Writer Oct 25, 2026 10:44 AM GMT
Report
Courtesy: பா.பிரியங்கன்

பாதிக்கப்பட்ட ஒரு இனமாக நாங்கள் இனிமேலும் மௌனிகளாக இருக்க முடியாது. செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ யாழ். நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால சுருக்க அறிக்கையும், அதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரமும் இந்தப் பிரச்சினையை ஒரு தீர்மானிக்கும் இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது.

அறிக்கையில் நமக்குள்ள சந்தேகங்கள்

பேராசிரியர் தனது முந்தைய மூன்று அறிக்கைகளிலும் "மனிதப் புதைகுழி" என்ற சொல்லையே பயன்படுத்தினார். இடைக்கால சுருக்க அறிக்கையில் அந்தச் சொல் இல்லை.

ஒரு இடத்தை மனிதப் புதைகுழி என்று குறிப்பிடுவதற்கும் சாதாரண அடக்கம் என்று குறிப்பிடுவதற்கும் இடையே சட்டரீதியாகப் பெரிய வேறுபாடு உண்டு.

முதலாவது குற்றம் நடந்தது என்ற அடிப்படையில் விசாரணையை நகர்த்தும். இரண்டாவது அந்தக் கேள்வியையே இல்லாமல் செய்துவிடும். களத்தில் கிடைத்த சான்றுகளும் அதே கேள்வியை எழுப்புகின்றன.

செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது.... | Interim Report Submitted Chemmani Mass Grave

ஒரு மீற்றர் அல்லது அதற்கும் குறைவான ஆழத்தில் ஏராளமான எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. சாதாரண மயானங்களில் இவ்வளவு மேலாகப் புதைப்பதில்லை. ஒரு வயதுவந்தவரின் எலும்புக்கூட்டோடு பிணைந்த நிலையில் ஒரு குழந்தையும் கிடைத்திருக்கிறது.

1991, 1994 ஆண்டுகளைக் கொண்ட நாணயங்களும் பாதணிகளும் கிடைத்திருக்கின்றன. அந்தக் காலத்தில் செம்மணி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது. இவற்றைத் தொற்றுநோய் அல்லது இயற்கை அழிவு மரணங்கள் என்று விளக்கிவிட முடியாது.

இந்தப் பொருட்கள் அறிவியல் ரீதியாக வகைப்படுத்தப்படவில்லை, முறையான புகைப்படப் பதிவும் இல்லை என்றும் குடும்பங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனிடம் குற்றத் தடுப்பு பிரிவு 3 மணி நேர விசாரணை

நமது கவனம் திசைமாற்றப்படும் பேராபத்து

எங்களில் பலர் தென்னிலங்கை அரசியலுக்குப் பின்னால் இழுபட்டுப் போயிருக்கிறோம். விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் போராடுகிறார்கள். அநுரகுமார திசாநாயக்கவைக் கொண்டாடும் மனநிலை இருக்கிறது.

தமிழர்களின் கவனம் இவற்றில் மூழ்கியிருக்கும் சம நேரத்தில், செம்மணியின் தடத்தையே அழிக்க நினைக்கிறார்கள் என்பதுதான் இப்போதுள்ள அச்சமாகும் . ஒரு விடயம் செய்திகளிலிருந்து மறைந்துவிட்டால், அதை மூடுவது எளிதானதொன்றாகிவிடும்.

செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது.... | Interim Report Submitted Chemmani Mass Grave

அத்தோடு, இதைப் பற்றிப் பேசினால் நீதிமன்ற நடைமுறைக்கு முரணாகிவிடுமோ என்ற அச்சத்தையும் சமூகத்தில் சிலர் விதைக்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்தை எதிர்க்கவில்லை.

நீதிமன்றத்தின் முன் உண்மை முழுமையாக வர வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அறிக்கையை விமர்சிப்பதும் குடும்பங்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதும் ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தின் நியாயமான உரிமையாகும்.

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக 42ஆவது மாதமாக தொடரும் போராட்டம்

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக 42ஆவது மாதமாக தொடரும் போராட்டம்

இப்போது நாம் செய்ய வேண்டியது

முதலாவது, குடும்பங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளைச் சமூகத்தின் பொதுக் கோரிக்கையாக்க வேண்டும். ஊகங்களின் அடிப்படையிலான பகுதிகள் நிராகரிக்கப்பட வேண்டும்.

சர்வதேசத் தடயவியல் நிபுணர்களின் சுயாதீன மதிப்பாய்வு வேண்டும். நாணயங்கள், பாதணிகள், எலும்புக்கூடுகளின் ஆழம் மற்றும் பரவல் சர்வதேசத் தரத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முந்தைய அறிக்கைகளோடு ஒப்பிடப்பட வேண்டும்.

இரண்டாவது, இந்த விடயத்தைச் சர்வதேச அரங்கில் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் அமைப்புகளும் தனிநபர்களும் தாங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்பான தரப்புகளுக்கும் இந்த அறிக்கையின் முரண்பாடுகளை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். ஒரே கடிதம் பல நூறு இடங்களிலிருந்து போனால் அதன் எடை வேறு.

செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது.... | Interim Report Submitted Chemmani Mass Grave

மூன்றாவது, சாட்சிகளையும் சான்றுகளையும் நாமே பாதுகாக்க வேண்டும். காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வாக்குமூலங்கள், புகைப்படங்கள், அகழ்வு தொடர்பான செய்திகள், ஊடகப் பதிவுகள் ஆகியவற்றை முறையாகப் பதிவுசெய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

முந்தைய அகழ்வுகளின் முடிவுகள் நம்பிக்கை தரும் விதத்தில் வெளிவரவில்லை என்பதே குடும்பங்களின் அனுபவம். அதனால் இந்த முறை எங்கள் கையிலும் ஒரு பதிவு இருக்க வேண்டும்.

நான்காவது, குடும்பங்களுக்குச் சட்ட ரீதியான ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டும். வழக்கை நடத்தும் வழக்கறிஞர்களுக்கும் குடும்பங்களுக்கும் பின்னால் கட்சி, பிரதேசம் என்ற வேறுபாடில்லாமல் தமிழ்ச் சமூகம் ஒன்றாக நிற்க வேண்டும்.

ஐந்தாவது, ஊடகங்கள் இந்தச் செய்தியைக் கைவிடக்கூடாது. வழக்கு நகரும் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடந்தது, என்ன கோரப்பட்டது என்பதைத் தொடர்ந்து மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

இறுதியாக செம்மணியில் புதைக்கப்பட்டிருப்பது எங்கள் மக்களின் நீதிக்கான கேள்வியாகும் பல தசாப்த காலமாகத் தெருவிலும் நீதிமன்றங்களிலும் கண்ணீரோடு நிற்கும் தாய்மார்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியவர்கள்.

இன்று பேசாமல் விட்டால், நாளை செம்மணிக்காகப் பேசவே முடியாத நிலை உருவாகிவிடும். ஒரு பாதிக்கப்பட்ட இனமாக ஒன்றிணைந்து, சட்டத்தின் வழியில், உரத்துப் பேச வேண்டிய சரியான நேரம் இதுவே....

படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்‌ச

படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்‌ச

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026