நெருக்கடி நேரத்தில் பிரேரணை எதற்கு..! சர்வதேசத்திடம் கேள்வியெழுப்பிய விமல் வீரவன்ச
United Nations
Sri Lanka
Financial crisis
Economy of Sri Lanka
By pavan
பிரேரணைகள் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதைச் சர்வதேச நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், பிரேரணைகள் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதைச் சர்வதேச நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டுமெனவும் இந்த பிரேரணைகள் இன உறவுக்கு குந்தகத்தையே ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில் சர்வதேச நாடுகளின் உதவிகளே வேண்டும். இந்நிலையில், இலங்கைக்குப் எதிராகப் புதிய பிரேரணை எதற்கு? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவை
அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட எந்தப் பிரேரணையும் செயலுருப்பெற்றதாக வரலாறு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

