உயிர்த்தஞாயிறு தாக்குதல் : சர்வதேச விசாரணை கோரும் பிரபல தேரர்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அம்பிலிப்பிட்டி புனித மிக்கேல் தேவாலயத்தின் ஐம்பதாண்டுகளை முன்னிட்டு நடைபெற்ற பொன்விழா கொண்டாட்டங்களில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ,கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச தலையீடு அவசியம்
இங்கு ஓமல்பே சோபித தேரர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் இருவரும் கருத்துரை வழங்கினர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி வழங்கப்படாவிட்டால் சர்வதேச தலையீடு அவசியம் என ஒமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.
முரண்பட்ட கர்தினால்
ஆனால் இந்த நாட்டில் நியாயமான விசாரணை நடத்தப்படாவிட்டால் தான் சர்வதேச விசாரணையை கோருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் பாதுகாப்புப் படையில் ஈடுபட்டவர்கள் இன்றும் அந்தந்த கதிரைகளில் இருப்பதாகவும், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் திருப்தி அடைய முடியாது எனவும் கர்தினால் மேலும் தெரிவித்துள்ளார்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்