செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை : இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல்

chemmani mass graves jaffna
By Sumithiran Aug 31, 2025 04:39 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தியில் அகழப்பட்டு கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான, சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியை தோண்டத் தோண்ட தினமும் விதவிதமான கொடூரங்கள் அங்கே அரங்கேறி காட்சி அளிக்கின்றன. நேற்று முன்தினமும் சிறியதொரு மனித எலும்புத் தொகுதி ஒன்று பெரிய மனித எலும்புத் தொகுதியை அணைக்கும் விதத்தில் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாயினதும் சேயினதுமாகவே இருக்கக்கூடும்.

மனித குலம் மன்னிக்க முடியாத ஆகப்பெரிய கொடூரம்

யுத்தத்தில் ஈடுபடாத தரப்பினரும் இங்கே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பல்வேறு வகையில் நிரூபணமாகிறது. அதிலும் மழலைகளும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பது மனித குலம் மன்னிக்க முடியாத ஆகப்பெரிய கொடூரம்.

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை : இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல் | International Investigation Chemmani Mass Grave

 அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இதுநாள் வரை எவ்வளவோ கொடூரமான காட்சிகளை பார்த்துவிட்டோம். இன்னமும் தோண்டத் தோண்ட என்னென்ன அவலங்களை, கொடூரங்களை எல்லாம் காண வேண்டி இருக்குமோ என நினைக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. எமக்கே இப்படி இருக்கும்போது இழந்த உறவுகளுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இது இவ்வாறு இருக்கையில் உள்ளகப் பொறிமுறை மூலம் செம்மணி மனிதப் புதை குழிக்கும், தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் காணப்படுகின்ற ஏனைய மனிதப் புதைகுழிகளுக்கும், வன்னி பெருநிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்கும், இனப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது என்பது வேடிக்கையான விடயம். அழித்தவர்களிடமே நீதியை கேட்டால் அவர்கள் வழங்குவார்களா என்ன?

கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: பிரித்தானியாவில் வெடித்த பாரிய போராட்டம்

கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: பிரித்தானியாவில் வெடித்த பாரிய போராட்டம்

ஸ்கான் பரிசோதனைக்கு அனுமதி வழங்காத பாதுகாப்பு அமைச்சு 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாண சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கும் நேரில் சென்று அங்கே நிலைமைகளை பார்வையிட்டார். பின்னர் அது குறித்த மனித புதைகுழி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்தார்.

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை : இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல் | International Investigation Chemmani Mass Grave

இது இவ்வாறு இருக்கையில் மனிதப் புதைகுழிகள் அமைந்துள்ள ஏனைய பகுதிகளை ஸ்கான் நடவடிக்கை செய்வதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் பாதுகாப்பு அமைச்சகம் அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை.

இந்நிலையில் சிறிஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று ஸ்கான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த கருவி துல்லியத்தன்மை குறைந்ததாகவே காணப்படுகின்றது. தற்போது அதனை விடவும் நவீனத்துவம் வாய்ந்த கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன.

அந்தக் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதி வசதி இல்லாவிட்டால் அதனை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூட தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். இது இவ்வாறு இருக்கையில் இலங்கை அரசாங்கம் ஏன் அந்த உதவிகளை பயன்படுத்துவதற்கு தயங்குகிறது?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து சட்டமா அதிபர் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து சட்டமா அதிபர் அதிருப்தி

உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு எந்த வகையில் நம்புவது?

நீதியின்படியும் இல்லாமல் அறத்தின் படியும் நில்லாமல் இருக்கும் இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு வழங்குவார்கள் என எந்த வகையில் நம்புவது? பாதிக்கப்பட்ட மக்களே உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதனை திணிப்பது தவறானது. எம்மக்கள் விரும்புகின்றது போல சர்வதேச விசாரணை மூலமே இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வினை வழங்க முடியும். எனவே சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கு இனிமேலும் தாமதிக்காது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், தமிழர் தலைவர்களும் ஓரணியில் திரள வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொண்டுள்ளார். 

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை : இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல் | International Investigation Chemmani Mass Grave

யாழில் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

யாழில் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025