ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் பொதுநலவாய நாடுகளின் (Commonwealth of Nations) கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் (Election Commission) ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
51 முறைப்பாடுகள்
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டம் மீறல் மற்றும் வன்முறை தொடர்பில் நேற்றைய தினம் 51 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 25 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 26 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |