கனடா மீதான பற்றை இழக்கும் மாணவர்கள்! வெளியானது காரணம்
சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த இடமாக கருதப்படும் கனடாவின் ஒன்டாரியோவுக்கு பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கான விசா நடைமுறையை கனடா அரசாங்கம் திருத்தியமைத்தமை இதற்கான முதன்மையான காரணி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
சர்வதேச மாணவர்கள்
கடந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒன்டாரியோவுக்கு சுமார் 239 753 சர்வதேச மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
எனினும், இந்த ஆண்டின் குறித்த காலப்பகுதிக்குள் சுமார் 141 000 மாணவர்கள் மாத்திரம் மாணவர் விசாவினூடாக ஒன்டாரியோவுக்கு சென்றுள்ளனர்.
குறைவடையும் எண்ணிக்கை
இதன்படி, ஒன்டாரியோவுக்கு பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 41 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவுக்கு பயணம் செய்யும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 50 வீதத்தால் குறைவடையுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |