பெண்ணாகப் பிறப்பெடுப்பதென்பது முன்ஜென்மத்து மாதவப்பேறே! (காணொலி)
இறைவனின் படைப்பில் பன்முகத் தளங்களில் தன்னை வெளிப்படுத்தும் ஆகச்சிறந்த ஒரு படைப்பு பெண்.
அத்தனை சிறப்புகளோடு மனித வாழ்வில் ஒப்பற்ற தாயாக உடன் பிறப்பாக உற்ற தோழியாக நம்மில் பாதியான துணையாக இன்னும் நம் உயிராக உதிரப்பிறப்பாக இப்படி பல தன்மைகளில் தம் பிறப்பை ஏற்படுத்திக்கொண்ட பெண்ணாக பிறப்பெடுப்பதென்பது முன்ஜென்மத்து மாதவப்பேறென நாம் தெளிவதே ஆகப்பொருந்தும்.
அப்படிப்பட்ட பெண்களை அவர்களின் உயர் மாட்சியின் சிறப்பை உறவுகளில் அவர்தம் மகோன்னதத்தை கொண்டாடும் ஒரு நாள்தான் இன்றைய மார்ச் 08 ஆகும்.
மனிதப் பிறப்பில் ஆணுக்கு பெண் நிகரா என்ற கேள்வி எழுகின்ற போதெல்லாம் இல்லவே இல்லை அவள் ஆணை மிஞ்சிய அவனை ஆணை செய்யும் அரசியும் அவளே என்று மனங்கொள்ளும் அளவிற்கு தன்னை வரித்துவிட்ட பெண் ஓருயிரணுவில் உலகை ஆளும் மகத்துவத்தை படைப்பவளாய் ஒத்த ரூபாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் திறனும்கொண்டவளாய் தனது வல்லமையை ஆதாரப்படுத்திக்கொண்டிருக்கிறாள் தினம் தினம் நம் வாழ்வில்.
