வீதியில் போதையில் தள்ளாடும் இளைஞர்கள் -வைரலாகும் காணொளி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வீதியில் தள்ளாடும் காட்சி காணொளியாக வெளியாகி உள்ளது.
பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் பிலடெல்பியா ஆகும். இது அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரம் என்பதுடன், ஏழாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
வீதியில் தள்ளாடும் இளைஞர்கள்
A selection of shot from the streets of Philadelphia. pic.twitter.com/5stiEPrSSY
— Spriter Team (@SpriterTeam) July 17, 2023
அண்மைக்காலமாக அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், பிலடெல்பியாவின் நகரமும் அதற்கு விதிவிலக்கல்ல.
இணையதளத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில் இளைஞர்கள் சிலர் போதையில் அங்குள்ள வீதியில் நடக்க முடியாமல் தடுமாறி நிற்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.