ஐபிசி தமிழ் வழங்கும் “போராட்டம்” திரைப்படத்துக்கான பாடலாசிரியர்கள் அறிமுகம்!
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்துக்கான பாடலாசிரியர்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்றைய தினம் (30.12.2025) இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்களின் அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் பெருமைப்படுத்தும் முகமாக ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தினால் “போராட்டம்” திரைப்படம் வெளிவரவுள்ளது.
அதன்படி, குறித்த திரைப்படத்தின் பாடலாசிரியர்களாக அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் பூவன் மாதீசன், வாகீசன், பொத்துவில் அஸ்மின், அருண் என். யோகதாசன், உமாகரன் ராசய்யா, கே.எஸ். சாந்தகுமார் ஆகியோர் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.
“போராட்டம்” திரைப்படத்தின் ஆரம்ப விழா கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி யாழில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது.
ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) தயாரிப்பில் ராஜ் சிவராஜ் (Raj Sivaraj ) பூவன் மதீசன் (Poovan Matheesan) ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறித்த திரைப்படத்தின் கதாநாயகனாக பாஸ்கரன் றீகன் அறிமுகமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |