இனவாதத்தை கிளப்பிய கம்மன்பில.! ஆரம்பமானது சிஐடி விசாரணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
குறித்த விசாரணைகள், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் அறிக்கைகள் வெளியிட்ட குற்றச்சாட்டில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய அறிக்கை
எனினும், அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் அந்த சர்ச்சைக்குரிய அறிக்கையின் விவரம் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்படவில்லை.
அதன்படி, கம்மன்பிலவுக்கு எதிராக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.
கோட்டை நீதவான் இதனை பதிவு செய்ததுடன், விசாரணை முன்னேறிக்கொண்டிருப்பதால் தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

