முப்பது அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை! அமைச்சர் அதிரடி
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Ananda Wijepala
By Dilakshan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட முப்பது அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் உள்ள சொத்து புலனாய்வுப் பிரிவால் குறித்த விசாரணைகள் நடத்தப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்துக்கள்
இந்த பொது முறைப்பாடுகள் சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டப்பட்டிருப்பதைக் காட்டுவதாகவும், இது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி