சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு: தடம் புரண்ட பயணிகள் தொடருந்து
சுவிட்சர்லாந்தின் பனிச்சரிவு காரணமாக பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தொடருந்து பிரிக் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள்
இந்தநிலையில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த பனியில் தொடருந்து சிக்கியுள்ளது.
இதன்போது, தொடருந்தின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டுள்ளன.

இந்தநிலையில், விபத்தின்போது தொடருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்தனர்.
தகவல் அறிந்து உலங்கு வானூர்தியில் வந்த மீட்புப்படையினர் மோசமான வானிலைக்கு மத்தியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, தொடருந்தின் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், காயமடைந்த ஐந்து பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்