பல மாவட்டங்களுக்கு வானிலை மையத்தின் ஆம்பர் எச்சரிக்கை!
மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05-07-2026) காலை 11 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (06-07-2026) காலை 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டமான நிலை
தீவிரமான தென்மேற்குப் பருவமழை நிலவுவதால், மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |