அரசு நிறுவனங்களின் பிணைக்கடன் நிலுவை...! வெளியான தகவல்
அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களுக்காக (SOEs) அரசாங்கத்தினால் பிணை (Guarantees) வழங்கப்பட்டு இதுவரை செலுத்தப்படாமல் எஞ்சியுள்ள கடன்களின் மொத்தப் பெறுமதி 2025 ஆம் ஆண்டு இறுதியளவில் சுமார் 1,080.18 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான நிதி மூலோபாய அறிக்கையிலேயே (Fiscal Strategy Statement) இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தி
இக்கடன் தொகையானது கடந்த மூன்று ஆண்டுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சராசரியுடன் ஒப்பிடுகையில் 3.59 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செலுத்தப்படாமல் உள்ள பிணைக்கடன்களில் பெரும்பாலானவை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) ஆகிய நிறுவனங்களினுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிறுவனங்களின் கடன் விபரங்கள் வருமாறு:
- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை: 237.69 பில்லியன் ரூபா
- வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA): 209.46 பில்லியன் ரூபா
- இலங்கை மத்திய வங்கி (CBSL): 201.94 பில்லியன் ரூபா
இந்த மூன்று நிறுவனங்களுக்கும் அரசாங்கம் வழங்கியுள்ள பிணைக்கடன் தொகையானது செலுத்தப்படாமல் உள்ள மொத்தப் பிணைக்கடன்களின் மதிப்பில் கிட்டத்தட்ட 60 சதவீதமாகும் என நிதி அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |