திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்! பேசப்பட்ட முக்கிய விடயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க சுதந்திரமான சனிக்கிழமையன்று இடம்பெற்றுள்ள இந்த உரையாடலில் உக்ரைன் போருக்கு ஒரு தீர்வைக் காணத் தான் உதவத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரித்ததாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்க உள்ள பின்னணியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இராஜதந்திரத் தீர்வு
இதன்படி, போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவும், நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் ட்ரம்ப் தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit: The Jamestown Foundation
இந்தநிலையில், ரஷ்யாவின் அடிப்படை அணுகுமுறைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மோதலுக்கு ஒரு அரசியல்-இராஜதந்திரத் தீர்வை ரஷ்யா விரும்பவதாக கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்கா ஈரானுடனான மோதலில் அதிக கவனம் செலுத்தி வருவதால் உக்ரைன் தொடர்பான இராஜதந்திர முயற்சிகள் சற்று மந்தமடைந்துள்ளன.
ட்ரம்புக்கு அழைப்பு
எவ்வாறாயினும், அமெரிக்க தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து சமரசம் பேச முயற்சிப்பார்கள் என்றும், தேவைப்பட்டால் மீண்டும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

Image Credit: ABC News
இதன்படி, ஈரானுடனான மோதலில் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் ஒரு நீண்டகாலத் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று புடின் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், ரஷ்யாவுக்கு வருமாறு ட்ரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் நினைவூட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |