பிள்ளையானின் கடிதத்தால் திணறும் புலனாய்வு அதிகாரிகள்:விசாரணை தீவிரம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கட்சித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பெயரில் உள்ள பிள்ளையான் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு சிறையில் இருந்தவாறே எழுதியுள்ள கடிதம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
சிறையில் உள்ள ஒருவர் வெளிநடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்த அனுமதியும் இல்லை. அப்படியிருக்கையில் பிள்ளையான் எப்படி இந்த கடிதத்தை அனுப்பினார் என்ற கேள்வியும் அவரின் இந்த கடிதத்தை அவரது கட்சி உறுப்பினர்கள் பகிரங்கமாக மட்டக்களப்பு மாநகர முதல்வரிடம் கையளித்துள்ளமை புலனாய்வாளர்களை திணற வைத்துள்ளது.
இதன் ஒருபகுதியாகவே மட்டக்களப்பு மாநகர முதல்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையும் ஆகும்.
பிள்ளையானின் கடிதத்தில் அப்படி என்னதான் இருந்தது? புலனாய்வாளர்கள் இது தொடர்பில் விசாரணையை ஏன் தீவிரப்படுத்த வேண்டும் என விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் இன்றைய பார்வை….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
