நாடளாவிய ரீதியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை - பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நடைபெறவுள்ளது.
2,787 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலைய வளாகத்திற்குள் பரீட்சார்த்திகள், பரீட்சை பணிக்குழுவினர் தவிர்ந்த வேறு எவருக்கும் அனுமதி இல்லை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு செய்யலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைக்கு தேவையான எழுதுகருவிகள் தவிர்ந்து ஏனைய பொருள்களை எடுத்து செல்வதை தவிர்க்குமாறும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திடீர் அனர்த்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா
