தலைவர் பிரபாகரனின் சகோதரியின் முக்கிய கோரிக்கை! கவனத்தை திருப்பும் இந்திய ஊடகங்கள்

Sri Lanka Sri Lanka Final War
By Dharu Feb 11, 2026 06:28 AM GMT
Report

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை புனரமைக்கும் கருத்துக்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் தமது கவனத்தை திருப்பியுள்ளன.

வல்வெட்டித்துரை நகரசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பிலும், குறித்த வீட்டினை நூலகமாக மாற்றம் செய்ய அவரது உறவினர்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் முயற்சிகள் குறித்தும் இவ்வாறு செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை புனர் நிர்மானம் செய்வது தொடர்பில் பின்வருமாரு செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி வெளியாகிய செய்தியில், 

தலைவர் பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்! சிவாஜிலிங்கம் விளக்கம்

தலைவர் பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்! சிவாஜிலிங்கம் விளக்கம்

பாரம்பரிய வீடு

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்ப உறுப்பினர் ஒருவர், இலங்கையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய வீடு இருந்த நிலத்தில் ஒரு பொதுநூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

தலைவர் பிரபாகரனின் சகோதரியின் முக்கிய கோரிக்கை! கவனத்தை திருப்பும் இந்திய ஊடகங்கள் | Leader Prabhakarans Sister S Main Request

இலங்கையின் வடக்கு முனையில் உள்ள அவரது பாரம்பரிய வீடு இருந்த நிலத்தில் ஒரு பொதுநூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அப்பகுதி நகரசபை, அந்த இடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருக்கான நினைவுச்சின்னமும் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின்  தலைவர் பிரபாகரன் வளர்ந்த வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தில் இருந்த இரு அறை வீடு 2010 ஆம் ஆண்டு இராணுவத்தால் இடிக்கப்பட்டது.

அதற்கு முன் 2009 இல் அவர் கொல்லப்பட்டதுடன், அவரது விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புடனான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது, பிரபாகரனின் இரு சகோதரிகளில் மூத்தவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம், அந்த நிலத்தின் சட்ட உரிமையாளர் எனக் கூறப்படுகிறார்.

அவர் அங்கு ஒரு பொதுநூலகம் அமைக்க விரும்புகிறார். அவர் தற்போது தமிழ்நாட்டில் வசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

தலைவர் பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்! சிவாஜிலிங்கம் விளக்கம்

தலைவர் பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்! சிவாஜிலிங்கம் விளக்கம்

சிவாஜிலிங்கத்தின் கருத்து 

நூலகத்திற்கான கட்டிடத் திட்டத்தை வல்வெட்டித்துறை நகரசபைக்கு அவர் சமர்ப்பித்துள்ளதாக, நகரசபைத் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறித்த ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக தொலைபேசி உரையாடலில் தெரிவித்ததாக மேற்படி ஊடகம் மேற்கோள்காட்டியுள்ளது..

 “2009 இல் பிரபாகரன் உயிரிழக்கவில்லை, ஐரோப்பிய நாட்டொன்றில் உயிருடன் உள்ளார் என்று நீண்ட காலம் கூறியவர்களில் அவரும் ஒருவர்.

தலைவர் பிரபாகரனின் சகோதரியின் முக்கிய கோரிக்கை! கவனத்தை திருப்பும் இந்திய ஊடகங்கள் | Leader Prabhakarans Sister S Main Request

இதன்படி 1184.66 சதுர அடியில் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் நூலகம், அந்த நிலத்தில் கட்டப்படவுள்ளது.

இராணுவம் 2010 இல் வீடினை இடித்தபோது, பிரபாகரனின் நினைவுச்சின்னமாக எதுவும் மீதமிருக்காதவாறு, இடிபாடுகளையும் அகற்றியது.

இதன்படி நகரசபையின் அனுமதி தேவை என்பதால், அவரது சகோதரி கட்டிடத் திட்டத்தை எங்களிடம் வழங்கியுள்ளார்,” என்று சிவாஜிலிங்கம் கூறியதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரபாகரனின் பெற்றோரின் சிலைகள் மற்றும் ‘இது பிரபாகரனின் சிறுவயது வீடு’ என்று குறிப்பிடும் பலகை அமைக்க அவரது சகோதரியிடம் அனுமதி கோரத் திட்டமிட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

“அவர் சம்மதித்தால், அவையும் செய்யப்படும். அவரது அனுமதி முக்கியம். அவர் ஒப்புக்கொள்ளாவிட்டால், நூலகம் மட்டும் கட்டப்படும்,” என தெரிவித்ததாகவும் சிவாஜிலிங்கம் விளக்கியுள்ளார்.

மேலும், “2009இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்துக்கு பின்னர், அவரது பெற்றோர்கள் முதலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தனர்.

பின்னர் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கான முகாமில் தங்கியிருந்தனர். பின்னர் அவர்கள் பிரபாகரனின் பெற்றோர் என்பது தெரியவந்ததும் இராணுவம் அவர்களை காவலில் எடுத்தது.

அவரது தந்தை 2010 ஜனவரியில் காவலில் மரணமடைந்தார். தாய் 2011 பெப்ரவரியில் மரணமடைந்தார். இதன்படி  மரபுகளின் அடிப்படையில் அந்த வீடு மூத்த சகோதரிக்கு சொந்தமாகும்.

குறிப்பாக மேற்கு நாடுகளில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும், ஆதரவாளர்கள், அமைப்பின் நினைவையும் பிரபாகரனின் நினைவையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகின்றனர்.

வயதான தமிழர்கள் இன்னும் அவரை நினைவுகூருகின்றனர். ஆனால் இளம் தலைமுறைக்கு வேறுபட்ட பார்வை உள்ளது” என்று சிவாஜிலிங்கம் கூறியதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

ஜே.வி.பி தரப்பு  

தற்போதைய இலங்கை அரசாங்கத்தை மையப்படுத்திய ஜே.வி.பி கட்சி , போரின்போது விடுதலைப்புலிகள் அமைப்பை கடுமையாக எதிர்த்திருந்தாலும், தற்போது வடக்கில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்க முன்னாள் போராளிகளை அணுகி வருவதாகக் கூறப்படுகிறது.

தலைவர் பிரபாகரனின் சகோதரியின் முக்கிய கோரிக்கை! கவனத்தை திருப்பும் இந்திய ஊடகங்கள் | Leader Prabhakarans Sister S Main Request

அதே நேரத்தில், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை வெளிப்படையாக ஆதரிக்காமல், சில நிகழ்வுகளை அமைதியாக அனுமதிக்கிறது.

“நூலகம் விரைவில் வல்வெட்டித்துறையில் கட்டப்படும் என நம்புகிறேன்,” என்று ஒரு தமிழ் வட்டாரம் தெரிவித்ததாக இந்திய ஊடகம் அடிகோடிட்டு காட்டியுள்ளது.

“ஆனால் திட்டம் சர்ச்சையாக மாறக்கூடிய வேறு எந்த நினைவுச்சின்னத்தையும் அவரது சகோதரி அனுமதிப்பாரா என்பது சந்தேகமே” என இறுதியாக குறித்த செய்தி விளக்கியுள்ளது.

அநுர அரசின் திரைமறைவு திட்டத்தை அம்பலப்படுத்தும் சுமந்திரன்

அநுர அரசின் திரைமறைவு திட்டத்தை அம்பலப்படுத்தும் சுமந்திரன்

ரில்வினுக்கு இந்தியா இதற்காக அழுத்தம் கொடுக்கும் - ரணில் தரப்பு உறுதி

ரில்வினுக்கு இந்தியா இதற்காக அழுத்தம் கொடுக்கும் - ரணில் தரப்பு உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020