கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவக்கூடும்.
அதேவேளை மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும்.
பலத்த காற்று
கடல் பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில், ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவுவதுடன், மணித்தியாலத்திற்கு 30 - 40 கி.மீ வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களிலும், மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 - 50 கி.மீ வரை அதிகரித்து வீசக்கூடும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |