அரகலயக்கு வெளிநாடுகளில் இருந்து பணம்...! சீறும் நாமல் எம்.பி
'அரகலய' போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "போராட்டத்தின் போர்வையில் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உயிரைப் பலிவாங்கினார்கள்.
இளைஞர்கள் தூக்குமேடைக்கு
இளைஞர் கூட்டமொன்றைத் தூக்குமேடைக்கு அனுப்பினார்கள்.

ஆலோசனைகளை வழங்கிவிட்டு, பகிரங்க ஊடகங்களுக்கு வந்து 'இப்போது வெளியே வாருங்கள், வீதிக்கு இறங்கித் தாக்குங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று கூறியவர்கள் இன்று அரசாள்கிறார்கள்.
அந்த இளைஞர்கள் தூக்குமேடைக்குச் சென்றுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |