ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அநுர தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஏற்பட்ட சுகவீனம் தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி சுனில் வடகல செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கைகளை முன்வைத்துள்ளது.
விசாரணை
சுபாஷ் என்ற நபரின் கணக்கின் ஊடாக இந்த போலியான தகவல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுனில் வட்டகல தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்