காவல்துறை கட்டளைச் சட்டத்தை மீறிய சட்டத்தரணிகளுக்கு எதிராக விசாரணை
நெடுஞ்சாலைகள் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் குழுவொன்று எதிராக விசாரணைகள் முன்னெடுக்க படவுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (20) கெசல்வத்தை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு மேலதிக நீதவான் மீது சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்ததாக கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்தது.
நீதிமன்றத்திற்கு புகார்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 50 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளும், போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினரும் கடந்த 18ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஈடுபட்டதுடன் நீதிமன்ற சட்டத்தையும் தேர்தல் சட்டத்தையும் காவல்துறை கட்டளைச் சட்டதையும் மீறியதாக கெசல்வத்தை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கெசல்வத்தை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன், முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கெசல்வத்தை காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
